நாட்டில் ஒருபுறம் இந்து, மற்றொருபுறம் இந்துத்துவவாதி - பிரதமர் மோடியை விமர்சிக்கும் ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பாக கங்கா சாலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அதேசமயத்தில், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது,

நாட்டில் ஒருபுறம் இந்து, மற்றொருபுறம் இந்துத்துவவாதி.

உண்மையும், அன்பும், அகிம்சையும் ஒருபுறம். 
மற்றொருபுறம் பொய்மையும், வெறுப்பும், வன்முறையும் நிற்கின்றன.

இந்துத்துவாவாதிகள் கங்காவில் மட்டும்தான் குளிப்பார்கள். ஆனால் ஒரு இந்து கோடிக்கணக்கான மக்களுடன் சங்கமிப்பர்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு இந்துத்துவவாதி என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் இந்து மதம் பற்றி அதிகப் பேச்சு அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஒரு இந்து தனது ஆயுள் முழுவதும் உண்மையான வழியில் நடந்துகொள்கிறார். உண்மைக்காக போராடுபவராக ஒரு இந்து வாழ்ந்துவருகிறார்.

ஆனால் இந்துத்துவாவாதிகள் அரசியல் செய்கிறார். பொய்களை பரப்புகிறார். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றும் முயற்சி செய்கிறார். நாதுராம் கோட்சே போல் நடந்து கொள்கிறார்." என்று ராகுல் காந்தி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahulganthi say about pm modi and hidu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->