உச்சத்தை அடைந்த ரெயில்வே வருவாய்.! ஆறு மடங்கு உயர்வு..! - Seithipunal
Seithipunal


நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைந்ததை அடுத்து மக்கள் நடமாட்டம் மிகவும் சாதாரணமாகி உள்ளது. இதனால் பயணங்களும் அதிகரித்துள்ளன. நாடும் கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

இந்த இயல்பு நிலையை, ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவை வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மூலம் எடுத்துக்காட்டியுள்ளன. 

இதையடுத்து, இந்திய ரெயில்வேக்கு கிடைத்த வருவாய் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவரத்தின் படி, கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் இந்த மாதம் 8-ந்தேதி வரை மொத்தம் சுமார் ரூ.33 ஆயிரத்து 476 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.17 ஆயிரத்து 394 கோடியாக இருந்தது. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த ஆண்டு வருவாய் 92 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு 34.56 கோடி பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 42.89 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

முன்பதிவு செய்ததின் மூலம் கடந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 307 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. ஆனால் இந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 961 கோடி கிடைத்து இருக்கிறது.

மேலும், முன்பதிவு செய்யாத பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 197 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 90.57 கோடி பேர் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 268.56 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதைப்போன்று, முன்பதிவு இல்லாமால் செய்த பயணத்தில் வந்த வருவாயும் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,086 கோடி கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரத்து 515 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Railway Revenue increase in six percentage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->