18 மாதங்களாக 2 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள்.! மாநிலத்தை உலுக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


2 சகோதரிகள் 18 மாதங்களாக 2 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானின் ஆல்வார் நகரத்தில் மிகப்பெரிய பண்ணை உள்ளது. இதில், நிறைய பேர் தங்களது குடும்பத்துடன் தங்கி இருந்து ஆடு, மாடுகளை பராமரித்து வருகின்றனர். அதில், ஒரு தம்பதி தங்களது 2 மகள்களுடன் தங்கி ஆடு, மாடுகளை பராமரித்து வந்துள்ளனர். 

அவர்களது மகள்களான சிறுமிகளில் ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக தாயிடம் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவரை தாய் அழைத்துச் சென்றபோது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகி இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சிறுமிடம் விசாரித்ததில் அந்த பண்ணை வீட்டில் இருக்கும் 2 ஊழியர்களால் தானும், தனது சகோதரியும் 18 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த மற்றொரு சிறுமியையும் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். 

அப்போது, அவரும் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இது பற்றி சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில், சிறுமிகளை கற்பழித்த இருவரின் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan 2 girls raped and pregnant in an form house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->