100 யூனிட்! தேர்தலுக்கு முன்பே இலவசத்தை அறிவித்த ராஜஸ்தான் மாநில முதல்வர்!
Rajasthan CM Ashok Gehlot announces 100 units electricity free
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், அம்மாநில அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஆளும் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் மக்களை கவரும் வகையில், இலவச அறிவிப்பு திட்டங்களையும் தற்போதே வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி சொல்லத் தொடங்கிவிட்டது.
அண்மையில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக 100 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்துள்ளார்.
200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முதல் நூறு யூனிட் இலவசம் மற்றும் நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இலவசமாக வழங்கப்படும் இந்த 100 யூனிட் மின்சார கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
English Summary
Rajasthan CM Ashok Gehlot announces 100 units electricity free