ஜாக்டோ ஜியோ போராட தடை..உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
Jackdaw Geo banned from fighting. Madurai High Court verdict
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்தநிலையில் இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.அப்போது இந்த மனு மீதான விராணையின்போது, அரசு ஊழியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியது.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.மேலும், அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Jackdaw Geo banned from fighting. Madurai High Court verdict