112 பேருக்கு 5 லட்சம் அபராதமா!!! குடிநீரை வீணாக்கியது குறித்து பெங்களூர் போலீசார்.... - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் கடந்த ஆண்டு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றவும், சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தியும் வந்தது. மேலும் டேங்கர் தண்ணீர் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கழிவு நீர் வாரியம் ஆகியவை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதல் பகுதியாகக் குடிநீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்தனர். ஏனென்றால் மக்கள் குடிநீரைக் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தாமல் தோட்டங்கள், வாகனங்கள் சுத்தப்படுத்த மற்றும் பல தேவைக்குக் குடிநீரை உபயோகித்ததே காரணம். 

பெங்களூரு மாநகரம் மற்றும் புறநகர்:

இதுகுறித்துக் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பெங்களூரு மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்துவதை கண்காணித்து வந்தனர். அப்போது சிலர் குடிநீர் மூலம் வாகனத்தைச் சுத்தம் செய்வது, சிலர் தோட்டத்துக்கு, கட்டுமானத்துக்கு மற்றும் அலங்கார நீரூந்துகளுக்குக் குடிநீரை பயன்படுத்துவது போன்ற பல இடங்களில் குடிநீரை வீணடித்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு நகரின் தெற்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 33 பேரும், மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில்  28 பேரும், வடக்கு மண்டலத்தில் 23 பேரும் என மொத்தமாக 112 பேர் குடிநீரை வீணையாக்கியது கண்டறியப்பட்டது.

அபராதம்:

 அவர்களுக்குக் குடிநீரை வீணாக்கியது குறித்து அபராதமாக மொத்தம் 5,06,000 ரூபாய் விதிக்கப்பட்டது. இதைக் கேட்ட பெங்களூரு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனியாவது குடிநீரை வீணாக்காமல் முற்றிலுமாக உபயோகிப்பார்கள் எனப் போலீசாரால் நம்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 lakh fine for 112 people Bangalore police for wasting drinking water


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->