இன்று நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு.!! நடிகர் ரஜினிகாந்த் பூரிப்பு.!! - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவுக்காக ராமர் கோயில் பல்வேறு மலர்களால் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளித்தது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்துள்ளனர். 

குறிப்பாக தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் பாரதி மிட்டல், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிதாப் பச்சன், கங்கனா ரனாவத், ரஜினிகாந்த், விவேக் ஓபராய், தனுஷ், ஹேமமாலினி, மாதுரி தீக்‌ஷித், ரன்பீர் கபூர், ஆலியா பட், சிரஞ்சீவி, ராம் சரண், முன்னாள் இன்னாள் விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ், சாய்னா நேவால், அணில் கும்ப்ளே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அயோத்தி வந்திருந்தனர். 

நடிகர் ரஜினிகாந்த் ராமர் கோவில் கும்பாபிஷக விழாவின் தொடக்கம் முதல் இறுதிவரை இருந்து  அயோத்தியில் இருந்து இன்று மாலை 6 மணிபுறப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கூறுகையில் "இந்த வரலாற்றுசிறப்புமிக்க தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு" என பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth shares him experience in ram temple pran pratishtha attended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->