உக்ரைன்-ரஷ்யா போரினால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் உணவு நெருக்கடி.! மந்திரி ராஜ்நாத் சிங் - Seithipunal
Seithipunal


டெல்லி தேசிய ராணுவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரினால் ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த பல நாடுகளில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, போரின் விளைவால் எரிபொருள் நெருக்கடியையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. அதில் இந்தியாவும் அடங்கும். சர்வதேச எரிபொருள் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறால், அதிக விலை கொடுத்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் சைபர் தாக்குதல் மற்றும் தகவல் சார்ந்த தாக்குதலானது பாதுகாப்பு உட்கட்டமைப்பில் ஒரு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது என்றும், இந்த சைபர் தாக்குதல்களால் மின்சக்தி உற்பத்தி, போக்குவரத்து, பொது துறை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh says Food crisis in Asian and African countries due to Ukraine Russia war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->