ராமர் கோவில் திறப்பு விழா எப்போது? பரபரப்புக்கு மத்தியில் வெளியான தகவல்.!
ramar temple open date announce
ராமர் கோவில் திறப்பு விழா எப்போது? பரபரப்புக்கு மத்தியில் வெளியான தகவல்.!
ஸ்ரீ ராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் காட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அதனால், திறப்பு விழா எப்போது என்று அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பாகவே இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அயோத்தி ராமர் கோவில் வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது.
இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். திறப்பு விழாவிற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ராமர் பக்தர்கள் பல வகைகளில் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
English Summary
ramar temple open date announce