64 ஆண்டுகளுக்குப் பிறகு... தலாய்லாமாவுக்கு நேரில் வழங்கப்பட்ட "ரமோன் மகசேசே விருது".! - Seithipunal
Seithipunal


ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும், 'ரமோன் மகசேசே' விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1959ஆம் ஆண்டு திபெத் மக்களின் கலாச்சாரம் மற்றும் புத்த மதத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக தலாய் லாமாவிற்கு ரமோன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் காரணமாக திபெத்திலிருந்து தலாய் லாமா வெளியேறியதால், அவரது சார்பாக தலாய் லாமா சகோதரர் கியாலோ தொண்டேன் பெற்றுக் கொண்டார். இதைதொடர்ந்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை தலைவர் சுசன்னா பி அபான், அறக்கட்டளை அறங்காவலர் எமிலி ஏ அப்ரேரா ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தலாய் லாமாவை சந்தித்து விருதை வழங்கி கௌரவித்தனர்.

உலக அரங்கில் நோபல் பரிசு உட்பட பல்வேறு சர்வதேச விருதுகளை தலாய்லாமா பெற்றிருந்தாலும், 1959ல் அவருக்கு வழங்கப்பட்ட ரமோன் மகசேசே விருது தான் தலாய்லாமாவின் முதல் சர்வதேச விருது என தலாய்லாமாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramon magsaysay award given to thalai lama after 64 years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->