ரம்ஜான் பண்டிகை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும்.

ஆனால், பிறை எந்த நாளில் தெரியும், எந்த நாட்டில் எந்த நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்ற குழப்பம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்தததால் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர். மேலும், நாளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.  முன்னதாக, ரம்ஜான் விடுமுறை வெள்ளிக்கிழமை இருந்தது.  அதன் காரணமாக வெள்ளி மற்றும் சனி ஆகிய 2 நாட்கள் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramzan festival 3 days holiday in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->