ராஞ்சி | தேசியக்கொடி ஏற்றும்போது மின்சாரம் தூக்கில் பலியான வாலிபரின் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்டின், ராஞ்சி மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை வீட்டின் மேற்கூரையில் ஏற்றும் போது அவர்கள் பயன்படுத்திய உலோகக் கம்பி, அவர்களது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்தக் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தாக்கூர் மாவட்டத்தின் அர்சண்டே கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை நேற்று மாநில குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மிதிலேஷ் குமார் சந்தித்தார். 

அப்போது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவின் படி, குடும்ப உறுப்பினர்களுக்கு ஓரிரு நாள்களில் அரசு சார்பில் ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஒப்பந்த வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மிதிலேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranchi boy electrocuted while hoisting the national flag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->