நோயாளிகளுக்கு குறி வைத்த எலி - தெலுங்கானாவில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காமெடி ரெட்டி பள்ளியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் ஷேக் முஜீப் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கை மற்றும் கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஷேக் முஜிபின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, மருத்துவக் கல்லூரி இயக்குனர் திரிவேணி மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் உள்பட நான்கு பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், எலிகளைப் பிடிக்க மருத்துவமனையில் ஆங்காங்கே கூண்டுகள் வைக்கவும், மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rat bite to patient in telangana hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->