11,000 வைரக் கற்கள்! ஜொலிஜொலிக்கும் ரத்தன் டாடா உருவத்தை செய்த நகை வியாபாரி!
Ratan Tata is a jeweler who has made 11000 diamonds
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அண்மையில் வயது முதிர்வினால் காலமானார். அவர் 86 வயதில் உயிரிழந்தார்.
ரத்தன் டாடா, இந்திய தொழில் உலகில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றவராக இருந்து, 21 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தின் தலைவராக பணி புரிந்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், டாடா குழுமம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தது, குறிப்பாக உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி கண்டது.
ரத்தன் டாடா மறைவிற்குப் பின், அவரது உடல் மும்பையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மும்பையில் உள்ள வொர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலரும் தங்களது துக்கத்தைத் தெரிவித்து வருகின்றனர். சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், 11,000 வைரக் கற்களை வைத்து ரத்தன் டாடாவின் உருவத்தை வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த அற்புதமான உருவக் கலைப்பணி தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Ratan Tata is a jeweler who has made 11000 diamonds