இன்னும் ரூ. 6,970 கோடி 2000 நோட்டுகள் மக்களிடம்... ரிசர்வ் வங்கி சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக ரூ. 500 மற்றும் ரூ. 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட நிலையில், இதுவரை 98.04 சதவீதம் நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெற்றதாகவும், ரூ. 6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் மக்களிடம் மட்டுமே உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், டெபாசிட் செய்யவும் அக். 7, 2023 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது.

மொத்தமாக ரூ. 3.56 லட்சம் கோடி அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்தன. ஆனால், அக். 31, 2023 அன்று ரூ. 6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளில் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பப் பெற்று உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI 2000 rupees note


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->