பொதுமக்கள் கவனத்திற்கு.. இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாது?.. ரிசர்வ் வங்கி விளக்கம்.! - Seithipunal
Seithipunal


500 ரூபாய் நோட்டில் அதன் வரிசை எண் அச்சாகும் இடத்தில் நட்சத்திர குறியீடு (*) இருந்தால் அந்த நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து மத்திய அரசின் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதன்படி ரூபாய் நோட்டில் வரிசை எண் அச்சாகும் இடத்தில், நட்சத்திர குறியீடு (*) இடம் பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த மாதிரியான ரூபாய் நோட்டுகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக போலியான தகவல்கள் பரவி வருகின்றன.

அதன்படி நட்சத்திர குறியீடு (*) இடம்பெற்றிருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் பொதுமக்கள் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த தகவலை 4 பேருக்கு ஷேர் செய்ய வேண்டும் என வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டதால் பலரும் நட்சத்திர குறியீடு (*) இடம்பெற்ற ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நட்சத்திர குறியீடு குறித்த ரூபாய் நோட்டுகள் செல்லும் என தெரிவித்துள்ளது. 

மேலும் அதன் பின்னணி குறித்தும் விளக்கம் அளித்துள்ளது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் போது குறைபாட்டுடன் உருவாகும் நோட்டுகளுக்கு பதிலாக, அதே எண் வரிசையில் புதிய நோட்டினை அச்சடிக்க வேண்டியதாகிறது. எனவே அவற்றை தனித்து காட்டுவதற்காக எண் வரிசையின் இடையில் நட்சத்திர குறியீடு (*) பொறிக்கப்படுகிறது. மற்றபடி, அனைத்து ரூபாய் நோட்டுகள் போலவே நட்சத்திர குறியீடு (*) இடம்பெற்ற ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI explained about star 500 ruppes notes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->