Breaking News: டெல்லியின் முதலமைச்சர் ஆகிறார் அரியானாவை சேர்ந்த ரேகா குப்தா..!
Rekha Gupta becomes the Chief Minister of Delhi
டெல்லி புதிய முதலமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த 50 வயதான ரேகா குப்தா தேர்வு பெற்றுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், நாளை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மதியம் 12 மணியளவில், பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக, துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என கூறப்படுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் சுமார் 01 லட்சம் பேர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை டெல்லியின் முதலமைச்சராக பதிவேற்கவுள்ள ரேகா குப்தா, அரியானாவில் பிறந்தவர். கட்சியின் பெண்கள் அணி தலைவராக இருந்தவர். கல்லூரி காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், சமீபத்திய தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rekha Gupta becomes the Chief Minister of Delhi