மனைவியின் இறுதி சடங்கிற்கு வராத கணவர் - சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


மனைவியின் இறுதி சடங்கிற்கு வராத கணவர் - சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்.!

கர்நாடக மாநிலத்தில் தும்கூர் அருகே கொரட்டகெரே நரசிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சோமசேகர் - கலாவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சோமசேருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. 

இது தொடர்பாக, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சோமசேகர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணை தனது வீட்டின் அருகேயே குடிசை ஒன்றில் தங்க வைத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த கலாவதி கடந்த 29-ம் தேதி மாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இறுதி சடங்கிற்கு கூட சோமசேகர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கலாவதியின் உறவினர்கள், அவரது உடலை சோமசேகர் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், சோமசேகர் மீது கலாவதியை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

relatives protest with woman body in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->