பஹல்காம் தாக்குதல்: வீர மரணமடைந்த குதிரை ஓட்டி குடும்பத்துக்கு நிவாரணம்; மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் உள்ளூர் குதிரை ஓட்டி தொழில் செய்து வந்த 20 வயதுடைய ஹூசேன் ஷாவும் ஒருவர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து சுற்றுலா பயணிகளை காப்பாற்ற அவர் பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது அவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். அவரது மரணம் குடும்பத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் வீர மரணம் அடைந்த உள்ளூர் குதிரை ஓட்டி ஹூசேன் ஷா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என சிவசேனா தலைவரும், மராட்டிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். 

அத்துடன் அவர் ஏக்நாத் ஷிண்டே அவரது சொந்த பணத்தில் இருந்து நிவாரணத்தை வழங்கவுள்ளார். மேலும், ஹூசேன் ஷாவின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், உங்கள் மகனின் தியாகம் வீண் போகாது என குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Relief for the family of the horse rider who died heroically in the Pahalgam attack Maharashtra Deputy Chief Minister announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->