ரூ.500 நோட்டுகளும் செல்லாதா? ரிசர்வ் வங்கியின் முடிவு என்ன? அதிகாரபூர்வ செய்தி இதோ!
Reserve bank 500 rupees issue 2023
ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமோ ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவரை ரூ1.80 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளதாக கூறினார்.
ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்து அல்லது அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளுமாறு கூறினார். அவசர அவசரமாக செய்ய தேவையில்லை தான் என்றாலும் செப்டம்பர் மாதத்தின் கடைசி 10-15 நாட்களில் மாற்ற சென்று அவதிப்பட வேண்டாம் என்று அவர் கூறினார்.
English Summary
Reserve bank 500 rupees issue 2023