சட்டவிரோதமாக கடன் வழங்கும் 27 செயலிகள் முடக்கம்..இந்திய ரிசர்வ் வங்கி.!
Reserve Bank of India banned 27 illegal apps
சட்டவிரோதமாக கடன் வழங்கும் 600 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 27 செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், மற்ற செயலிகளை முடக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக கடன் வழங்கும் சலுகைகள் குறித்து 3000-க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட புகார்கள் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகளும் இன்னும் ஒரு சில மாதங்களில் முடக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.
English Summary
Reserve Bank of India banned 27 illegal apps