பங்குச்சந்தை சரிவு.. அதானி குழுமத்தால் அனைத்து வங்கிகளுக்கும் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனமானது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது.  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் தங்களுடைய பங்குகளின் மதிப்புகளை உயர்த்தி காட்டும் நோக்கத்தில் மோசடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது.  

இதன் காரணமாக கடந்த ஒரு வாரம் முன்பு வரை உலக பணக்காரர்களின் பட்டியலில் கௌதம் அதானே மூன்றாவது இடத்தில் இருந்து வந்த நிலையில் 15 வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார். அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 5.78 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அம்புஜா சிமெண்ட்ஸ் 16.56 சதவீதம் பங்குகள் மிகவும் அடிவாங்கிய நிலையில் ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்த பங்குகள் ரூ.11.76 லட்சம் கோடியாக சரிந்தது.

இதன் காரணமாக, கடந்த 5 நாள்களில் மட்டும் அதானி குழுமத்திற்கு ரூ. 7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இத்தகைய நிலையில் முதலீட்டாளர்களை இழப்புகளில் இருந்து காக்க தான் பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது எனவும், இது எதிர்கால திட்டங்களில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அதானி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பங்குசந்தைகளில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களின் காரணமாக எஃப்.பி.ஓ- வை தொடர்வது சரியானது அல்ல எந்து முடிவெடுத்துள்ளதாக அதானி வீடியோ மூலமாக விளக்கமளித்திருக்கின்றார்.
இப்படிப்பட்ட நிலையில், அதானி குழுமத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் அதானி குழுமத்திற்க்கு வழங்கப்பட்ட கடன் என்று அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reserve bank order To all Bank about adani Team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->