10 ரூபாய் நாணயங்கள் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய ரிசர்வ் வங்கி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்த வதந்திகள் பரவி வருவதால் 10 ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள், வணிக வளாகங்கள், பேருந்துகளில் வாங்க மறுப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இன்றும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்து ரூபாய் நாணயங்கள் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள், பத்து ரூபாய் நாணயங்களை பற்றி போதிய விழிப்புணர்வு இருந்தும், மக்களிடையே நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. குறிப்பாக பேருந்து நடத்துனர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மாவட்ட நாணய நிர்வாக குழு சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. இதில் நடத்துனர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கைகளை பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஒட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் என வங்கிகள் மற்றும் பொது இடங்களில் விளம்பரப் படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பத்து ரூபாய் நாணயங்கள் பற்றிய வதந்திக்கு மத்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reserve Bank put an end to the rumor about ten rupee coins


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->