பரோடா வங்கியின் மொபைல் செயலிக்கு தற்காலிக தடை விதித்த ரிசர்வ் வாங்கி - நடந்தது என்ன?
reserve bank temporary ban baroda bank mobile app
பரோடா வங்கியின் மொபைல் செயலிக்கு தற்காலிக தடை விதித்த ரிசர்வ் வாங்கி - நடந்தது என்ன?
இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியில் ஒன்று 'பேங்க் ஆப் பரோடா'. இந்த வங்கிக்கு 'பாப் வேர்ல்டு' என்னும், மொபைல் செயலி உள்ளது. இந்த மொபைல் செயலியை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் படி, ரிசர்வ் வங்கி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேங்க் ஆப் பரோடா வங்கியின் பாப் வேர்ல்ட் மொபைல் செயலியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் செயலியில், வாடிக்கையாளர்களை இணைப்பதில் சில குறைபாடுகள் இருப்பதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகளை வங்கி களைந்து, ரிசர்வ் வங்கி திருப்தியடைந்த பிறகு, புதிய வாடிக்கையாளர்களுக்கு மொபைல் செயலியை வழங்க அனுமதிக்கப்படும்.
இந்த நடவடிக்கையால், தற்போதுள்ள வாடிக்கையாளர்கள், மொபைல் செயலியை பயன்படுத்துவதில் இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேங்க் ஆப் பரோடாவுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
English Summary
reserve bank temporary ban baroda bank mobile app