நாடு முழுவதும் அரிசி ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு.!
Rice export Stop in India
நாடு முழுதும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் பெய்து வரும் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக உணவு மற்றும் அத்தியாவசிய தானியங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, கோதுமை, அரிசி, பால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் அரிசியின் விலை 20% அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பது உறுதி செய்யும் வகையிலும் அரிசியின் சில்லறை விலை ஓராண்டுக்கு 11 சதவீதத்திற்கும் மேலாக இருப்பதால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அதேபோல் மற்ற நாடுகளின் உணவு பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rice export Stop in India