மீண்டும் தலை தூக்கும் ஹிஜாப் விவகாரம்.!! பள்ளி மாணவன் மீது கொடூரத் தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவிகளை வலு கட்டாயமாக வலது சாரி ஆதரவு மாணவர்கள் தடுத்து நிறுத்தியதை தட்டி கேட்ட மாணவன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அதிர்ச்சி.!!

திரிபுரா மாநிலம் செப்பாகிஜாலா மாவட்டத்தில் உள்ள கொரோல்முரா மேல்நிலைப் பள்ளிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு வலதுசாரி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இஸ்லாமிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வலதுசாரி மாணவர்கள் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த பத்தாம் வகுப்பு மாணவன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தனியார் கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததற்கு எதிராக கல்லூரி மாணவிகளும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Right wing students protest against schoolgirls wearing hijab in Tripura


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->