அயோத்தி ராமர் கோவிலில் இன்று முதல் சிறப்பு பூஜை தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 12:20 மணிக்கு கோளாறு காலமாக நடைபெற உள்ளது. 

அதற்கு முன்பாக நடக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் இன்று முதல் வரும் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 அந்த வகையில் இன்று ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த சாஸ்திர அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட ஆச்சாரியார் பரிகார பூஜை நடத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை ராம் லல்லா சிலையின் பரிசார் பிரவேச விழா நடைபெறுகிறது. நாளை மறுநாள் ஜல யாத்திரை தீர்த்த பூஜை, கந்தா திவாஸ் சடங்குகளும், வரும் ஜனவரி 19ஆம் தேதி கேசரா திவாஸ், கிருதாதிவாஸ், ஔஷததிவாஸ், சடங்குகள் நடைபெற்று முடிந்த பிறகு அன்று மாலை தான்யாதிவாஸ் சடங்கு நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி காலை ஷர்கராதிவாஸ், பலாதிவாஸ் சடங்குகளும் மாலையில் புஷ்ப தீப ஆராதனையும் நடைபெற உள்ளது. ஜனவரி 21ஆம் தேதி காலை மத்யாதிவாஸ் மற்றும் மாலை ஷியாதிவாஸமும் சடங்குகளும் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ritual pujas starts at Ram temple in Ayodhya from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->