மோடி அரசு கவிழ்கிறது? தேர்தலுக்கு தயாராக இருங்க! நாள் குறித்த மூத்த தலைவர் - அதிரும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவில் பாஜக 242 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு நானூறு இடங்களில் வெற்றி பெறுவோம், தனி பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்து, ஆட்சி அமைப்போம் என்றெல்லாம் பாஜக தலைவர்கள் முழக்கம்பட்டு வந்தனர். 

இப்படியான சூழ்நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

மேலும் தற்போதைய பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளதால், இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம், கவிழ்க்கப்படலாம் என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டணி அரசு மிகவும் வலுவிழந்து உள்ளது என்று, ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சி கவிழலாம். எதற்கும் தேர்தலுக்கு தயாராக இருங்கள் என்று, தனது தொண்டர்களுக்கு லாலு பிரசாத் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

மத்தியில அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும், மீண்டும் பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளது. 

எப்படி பார்த்தாலும் சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஏன் இண்டி கூட்டணி கட்சிகள் கூட மீண்டும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் நிலை உருவாக்கலாம்.

இருப்பினும் தற்போது இருக்கக்கூடிய பாஜக தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சியை, மக்கள் மத்தியில் ஒரு வலுவில்லாத ஆட்சி என்பதை கட்டமைக்கும் வகையில், காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் இந்த பிரச்சார யுத்தியை முன்னெடுத்துள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RJD Lalu say about BJP Modi Govt july 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->