சாலை விபத்து!!! அரசு பேருந்துக்கு குறுக்கே வந்த பைக்... பரபரப்பு வீடியோ!
Road accident Bike crosses government bus Sensational video
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரெனக் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்பிய செயலால் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் இந்த விபத்தில் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிசிடிவி வீடியோவில், மகாராஷ்டிரா லட்டூர்- நான்டெட் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே பைக் ஓட்டி வந்த நபர் திடீரென சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்கப் பேருந்தை சட்டென்று திருப்பி உள்ளார். இந்தத் திடீர் செயலால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இவ்வாறு சிசிடிவி வீடியோ காட்சியில் இருந்தது.மேலும் இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 15 முதல் 20 பேர் வரைப் படுகாயம் அடைந்தனர் என்றும் இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Road accident Bike crosses government bus Sensational video