கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி..பாஜக மீது ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு!  - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர்.இதற்காக அந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா ரூ.15 கோடி பா.ஜனதா வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

டெல்லியில் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுத்ததாக பாஜக மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது .டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர்.இதற்காக அந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா ரூ.15 கோடி பா.ஜனதா வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும் இது தொடர்பாக சஞ்சய் சிங் எம்.பி. கூறுகையில், தொலைபேசி வாயிலாக அந்த 7 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்றும் அப்போது கட்சி மாறுவதற்காக சிலருக்கு நேரடி சந்திப்புகளிலும், சிலருக்கு வேறு நபர்கள் மூலமாகவும் பணம் வழங்கப்பட்டுள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் . மேலும் தேர்தல் முடிவு வெளிவரும் முன்பே பா.ஜனதா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது என்றும்  அதனால்தான் இதுபோன்ற செயல்களில் அந்த கட்சி ஈடுபடுகிறது என்று அப்போது அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 15 crore each for MLAs who switched sides. Aam Aadmi Party slams BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->