ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய சொல்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் - இந்திரேஷ் குமார் பேட்டி..!
rss leader indiresh kumar press meet
பி.எப்.ஐ.அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. இதே போல் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் பல கடசிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து, பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது, "பி.எப்.ஐ.மீது ஏற்பட்டுள்ள தடை காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்தது. நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகளே இல்லை. மத்திய அரசின் இந்த தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்களே ஆவர். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானவர்களாக கருதப்படுவர்.
இந்த தடையை எதிர்ப்பதனால், அவர்கள் வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர் என்று அர்த்தம். ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை விதிக்க சொல்பவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
இன்று ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்ய வலியுறுத்தும் அனைத்துத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தத் தலைவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்ததற்கு, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் போராட்டமும், அவர்களின் தியாகமும்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய அரசியலமைப்பை பாதுகாத்ததுடன், நாடு சர்வாதிகார ஆட்சிக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
rss leader indiresh kumar press meet