இந்தியா சூப்பர் பவர் நாடாக மாறி வருகிறது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.!
RSS leader mohan Bhagavad speech about india growth
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் இந்தியா சூப்பர் பவர் கொண்ட நாடாக மாறி வருகிறது. இதனை ஒட்டுமொத்த உலகமும் கூறி வருகிறது.
இந்தியா விஷ்வ குருவாக உருவாக உள்ளது. அந்த இலக்கை நாம் அடைய வேண்டும். நாம் யாரையும் வெற்றி கொள்ளவோ அல்லது யாரையும் மாற்றவும் போவதில்லை முனிவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று தர்மத்தின் வழியில் அனைவரும் நடக்க வேண்டும். நம்முடைய சக்தி மற்றவர்களுக்கு பிரச்சினைகளை கொடுக்கவோ வலி ஏற்படுத்துவதற்கே இருக்காது.
அதற்கு மாறாக அமைதியை உருவாக்கவும் பலவீனம் அடைந்தவர்களை பாதுகாப்பதற்காகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் தங்களை உயர்ந்தவர்கள் என நிலைநிறுத்திக்கொள்ள போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நாம் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம்.
நம்முடைய ரிஷிகள் உண்மையில் சமூகத்திற்கு அதிக சேவையாற்றி உள்ளனர். சனாதன தர்மம் என்பது இந்து ராஷ்டிரம் மற்றும் இந்து பாரம்பரியம். அதன் காரணமாகவே எதிர்காலத்தில் இந்தியா சூப்பர் பவர் நாடகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
RSS leader mohan Bhagavad speech about india growth