ரஷ்யா - உக்ரைன் போர் : அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் -மோடி! - Seithipunal
Seithipunal


பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ஒரு முக்கிய சர்வதேச அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 2009-ம் ஆண்டு உருவானது.

பின்னர் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இதில் இணைந்தது. 2024 ஜனவரியில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் பிரிக்ஸில் இணைவதற்கு அனுமதி பெற்றுள்ளன.

16-வது பிரிக்ஸ் மாநாடு 2024 அக்டோபர் 22-ம் தேதி ரஷியாவின் காசான் நகரில் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷியாவில் உள்ள காசான் நகருக்கு சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து இருவரும் உற்சாகமாக சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதினை சந்தித்த போது, பிரதமர் மோடி, ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து பேசியது முக்கியமாக காணப்பட்டது. "இந்த மோதல்களில், நாங்கள் இரு தரப்பினருடனும் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளோம். எங்கள் நிலைப்பாடு இது—பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும், அமைதியான தீர்வுகளைத் தேட வேண்டும், அதற்கு இந்தியா எப்போதும் உதவத் தயாராக இருக்கிறது" என்று மோடி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine war must be resolved peacefully Modi pressured Putin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->