ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் மணற்சிற்பம்.! - Seithipunal
Seithipunal


ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் மணற்சிற்பம்.!

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக உள்ளது. மேலும், ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த கோர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிடப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மணல் சிற்பம் முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனையும் பிரார்த்திக்கிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு வரிசையாக நின்று கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று, புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை, கோவை, நெல்லை உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sand sculpture for odisa train accident in poori beach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->