பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு திருமணம் ஆகவில்லை... சரத் பவர் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய "ஜன் ஜாகர் யாத்ரா" நடைபயணத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் "இந்தியாவில் நிலவும் விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய மாநில பாஜக அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். நான் வெளியே சுற்றுப்பயணம் செல்லும் போதெல்லாம் கிராமங்களை பார்வையிடுவது வழக்கம்.

எல்லா கிராமங்களிலும் 15 முதல் 20 இளைஞர்கள் வேலைக்கு போகாமல் வெட்டியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் என்ன செய்கிறீர்கள் என விசாரித்தபோது பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள். திருமணம் ஆகிவிட்டதா என கேட்டேன் அதற்கு அனைவருமே ஆகவில்லை எனக் கூறுகிறார்கள்.  வேலையில்லாத நபர்களுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பாலான கிராமங்களில் இதே நிலைதான் நீடிக்கிறது. தேர்தல் நேரத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் பாஜக அரசு வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. மகாராஷ்டிரா அரசின் மோசமான ஆட்சி காரணமாக பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் குஜராத்திற்கு செல்கிறது" என தனது உரையில் மத்திய மாநில பாஜக அரசுகளை கடுமையாக சாடினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sarath Pawar said young people are not getting married in BJP rule


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->