சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜனாதிபதி, பிரதமர்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவிடத்தில்  வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, டெல்லி ஆளுநர், மத்திய மந்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ''அவர் வடிவமைத்த நாட்டின் தலைவிதியை அசாதாரண அர்ப்பணிப்பை நாம் நினைவு கூறுகிறோம். 

அவரது அர்ப்பணிப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கானது. எங்களுக்கு அவர் தொடர்ந்து வழிகாட்டுகிறார். அவருடைய சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்'' என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sardar vallabhbhai Patel birth anniversary


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->