கோர விபத்து: நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய டிரக்! 8 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


சதீஷ்கர், பீமதாரா பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒரே டிரக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது பீமதாரா, கத்தியா கிராமம் அருகே நள்ளிரவில் டிரக் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் டிரக்கில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Satishkar truck collide lorry 9 people killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->