மதமாற்ற தடை சட்டம் | 7 மாநிலங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


பாஜக ஆளக்கூடிய கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த மதமாற்ற தடை சட்டம் மூலம், ஒரு மதத்தை பின்பற்றும் நபரை மதமாற்றம் செய்வதற்கு முன் அல்லது மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை அம்மாநிலத்தில் உருவாகியுள்ளது.

இந்த சட்டம் இயற்றப்பட முக்கிய காரணமாக, ஆசை வார்த்தைகளைக் கூறி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி (லவ் ஜிகாத்) மதமாற்றம் செய்து திருமணம் செய்வதைத் தடுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த மதமாற்ற தடை சட்டதிற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், இந்த சட்டங்களை ரத்து செய்யக்கூறி மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

மேலும், உச்ச நீதிமன்றத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகளின் மனுக்களில், இந்த மதமாற்ற தடைச் சட்டம் இந்திய அரசியல் சாசனம் வழங்கி உள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்குகளை நேற்று உச்சநீதிஅமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் உச்ச நீதிமன்றத்துக்கே மாற்றி மொத்தமாக விசாரிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு, சம்பந்தப்பட்ட 7 மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் குறித்தும் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC Order TO State GOVT 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->