வெளுத்து வாங்கிய மழை - பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் தாக்கம் கர்நாடகத்திலும் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியதால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவும் பெங்களூருவில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பெங்களூருவில் பல சுரங்க பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி கிடந்த நிலையில் நேற்றும் கனமழை பெய்ததால் சுரங்கப் பாதைகள், சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. 

இதற்கிடையே பெங்களூரு உள்பட 18 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிககனமழை எச்சரிக்கையினால் பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷ் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and colleges leave in banglore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->