மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.!! மாணவர்களுக்கு குறிவைத்த கும்பல் - பள்ளிகளை மூட உத்தரவு.!
school closed in manipur for students murder
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.!! மாணவர்களுக்கு குறிவைத்த கும்பல் - பள்ளிகளை மூட உத்தரவு.!
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ந்தேதி பெரும் கலவரமாக மாறியதில், இதுவரைக்கும் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதன் விவிகாரம் பின்வருமாறு:- "மாநிலத்தின் தலைநகரான இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி குகி இனத்தை சேர்ந்த கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவர்களை தேடி வந்தனர்.
தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
இதற்கிடையே மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இம்பால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டன பேரணிகளை நடத்தினர்.
அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ஒரு சில இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியம் உள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையில் மாணவர்கள் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் மீண்டும்பாதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வெள்ளிக்கிழமை வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
school closed in manipur for students murder