தூத்துக்குடி : பள்ளிக்குச் சென்ற சிறுமி மூக்கில் ரத்தம் வடிந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : பள்ளிக்குச் சென்ற சிறுமி மூக்கில் ரத்தம் வடிந்து உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானரமுட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த மூன்று நாள்களாகவே கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளியில் தேர்வுகள் நடைபெறுவதால் சிறுமியின் பெற்றோர் அவரை பள்ளிக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், சிறுமி நேற்று மாலை காய்ச்சலுடன் வகுப்பறையில் இருந்தபோது திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது.

இத்தைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனே பெற்றோருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சலுடன் பள்ளிக்குச் சென்ற சிறுமி மூக்கில் ரத்தம் வடிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl died in thoothukudi for fever


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->