பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
school student bomb threat to schools in delhi
தலைநகர் டெல்லியில் உள்ள 131 பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் 2-ம் தேதி, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மின்னஞ்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே ஊழியர்கள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
அதில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று தெரிய வந்தது. இருப்பினும் போலீசார் மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரியை கண்டறிந்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் என்பது கண்டறியப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் குறித்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த மாணவன் இதேபோல், மேலும் 2 பள்ளிகளுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. போலீசார் அவனை எச்சரித்து, பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கினர். பள்ளிக்கு மாணவன் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பேருடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்க்காது.
English Summary
school student bomb threat to schools in delhi