பள்ளி மாணவர்கள் வாட்சப் குருப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட ஆசிரியர்.! அதிரடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வாட்ஸ்அப் குரூப்பில் தினமும் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோ, வீட்டுப்பாடம், மற்றும் மாணவர்களின் மதிப்பெண் போன்றவற்றையும் வெளியிடுவார்கள்.

இந்தநிலையில் அந்த பள்ளியின் ஆசிரியர் இன்சாப் முகமது என்பவர் மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கும் அந்த வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த பெற்றோர்கள் கோபமடைந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆபாச வீடியோ அனுப்பிய இன்சாப் முகமது என்பவரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். அதில் இவர் அனுப்பியது நிருபனமானது. இதனையடுத்து ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School teacher send porn video in students whatsapp group


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->