லக்னோ : கடும் குளிரால் பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்.!  - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீப நாட்களாக கடும் குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனால், இன்று முதல் வருகிற ஜனவரி 10-ம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாணவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை நினைவில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீதாபூரில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 4-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் புலனத்தின் வழியாக மாணவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதேபோன்று கோரக்பூரில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வியாழக்கிழமை வரை கடும் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், வடமேற்கு இந்தியாவின் சமவெளி பகுதியில் இமயமலையில் இருந்து வடமேற்கு காற்று வீசுவதால், அடுத்த இரண்டு நாட்களில் இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school time change in lukno for heavy cold


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->