சோகத்தில் சினி உலகம் - பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா காலமானார்.!   - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பின்னணி நடனக் கலைஞராக கால் பதித்த நடிகை சகுந்தலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நேதாஜி, நான் வணங்கும் தெய்வம், கை கொடுத்த தெய்வம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் சி.ஐ.டி சங்கர் படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்ததால் 'சி.ஐ.டி சகுந்தலா' என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் 'பொன்மானை தேடி'. அதன் பின்னர், அவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சி.ஐ.டி. சகுந்தலா வயது மூப்பு காரணமாக இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் நேற்று மாலை அறிவித்தனர். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor cid sagunthala passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->