பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை இலவச ஹெலிகாப்டர் சவாரி அழைத்து சென்ற அரசு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேஷ் பாகல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் போல சத்தீஸ்கர் மாநிலத்திலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசு என்று அறிவித்திருந்தது.

அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசாக ஹெலிகாப்டரில் சவாரி அழைத்துச் செல்லப்படும் என சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் இன்று ஹெலிகாப்டரில் சவாரி அழைத்து செல்லப்பட்டனர்.  

இது குறித்து அம்மாநில அமைச்சர் பிரேம்சாய் சிங் தெகாம் பேசியதாவது, 10 மற்றும் 12-ம் வகுப்பில், முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்து செல்வோம் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் இந்த திட்டம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School toppers helicopter ride in satishkar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->