புதுச்சேரியில் பச்சை நிறமாக மாறிய கடல் நீர்!...பீதியடைந்து பொதுமக்கள் வெளியேற்றம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நேற்று கடலின் அலை பச்சை நிறமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்தது. இதன் காரணமாக, கடலில் சுமார் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும்,  மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி கடலின் அலை நேற்று பச்சை நிறத்தில் மாறத் தொடங்கியதால், லேசான துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் கடலில் குளித்து கொண்டு இருந்த நிலையில், அவர்களது உடலில் லேசான அரிப்பு எடுத்ததை அடுத்து, அவர்கள் பீதியடைந்து உடனடியாக கரை திரும்பினர்.

மேலும், கடல்நீர் பச்சையாக மாறிய தகவல் அறிந்த பொதுமக்கள்  ஏராளமானோர், கடற்கரைக்கு வந்து கடல் அலையை வேடிக்கை பார்த்து புகைப்படங்களை எடுத்து ரசித்தனர். நேற்று காலை தொடங்கிய கடலின் பச்சை நிறக்காட்சி மாலை வரை நீடித்தது. இதனை ஏராளாமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sea water turned green in puducherry people evacuated in panic


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->