3 மாணவர்கள் உயிரிழப்பு - டெல்லியில் 13 பயிற்சி மையங்களுக்கு சீல்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தவெல்ல நீர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் புகுந்து விட்டது.

அப்போது, அங்கிருந்த பயிற்சி மாணவர்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போலீஸ் நிலையத்தில், பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரைக்கும் பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விதிகளை மீறி இயங்கி வரும் பயிற்சி மையங்கள் மீது டெல்லி மாநகராட்சி தனது நடவடிக்கையை தொடங்கி உள்ளது. 

அதாவது, அடித்தளத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பயிற்சி மையங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 13 பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பல்வேறு பயிற்சி மையங்களில் ஆய்வு செய்தும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seal to 13 coaching center in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->