அரசு பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயம் - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயம் - எங்குத் தெரியுமா?

கேரள மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் ஆன்றனி ராஜூ தலைமையில் திருவனந்தபுரத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

"மத்திய அரசின் போக்குவரத்து சட்ட விதிகளின் படி வாகனங்களில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இலகுரக வாகனங்களில் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்கும் விதமாக சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதனை கண்காணிப்பதற்காக மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதற்கு இதுவரைக்கும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கேரள அரசு பேருந்து உள்பட கனரக வாகனங்களில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதனால், சரக்கு லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணியோ, நடத்துனரோ அல்லது கிளீனரோ கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் இந்த சீட் பெல்ட்டை சீரமைப்பதற்காக செப்டம்பர் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து கேரளா மாநிலத்துக்கு வரும் அரசு பேருந்து உள்பட வாகனங்களுக்கு சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seat belt compulsary in kerala govt bus and heavy vechicles


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->