அதிர்ச்சி.. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணத்தை சுருட்டிய 2 ஊழியர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேல் புறநோயாளிகளும் 5 ஆயிரம் உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள். 

அதில், பிற மாநில நோயாளிகளுக்கு கட்டணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்ஸ்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் இருப்பதால் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்கும் பிரிவில் முறைகேடு நடந்துள்ளது. 

அதாவது, பல வருடங்களாக ஆவண கிளார்க்காக பணியாற்றி வரும் பெருங்குளத்தை சேர்ந்த குபேரன், ஆவடி பகுதியை சேர்ந்த கலைமகன் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து மருத்துவமனை பதிவேட்டில் போலி கணக்கு எழுதி பணம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து டீன் தேரணிராஜன் மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி விசாரணை நடத்தி குபேரன், கலைமகன் உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அரசு மருத்துவமனையில் நிர்வாக அலுவலகத்தில் பணம் கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 emplopyees arrested for money theft in chennai rajiv gandhi hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->